Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஜெயலலிதாவின் மரணம் குறித்து வெளியான தகவல்கள் உண்மை: அப்பலோ

In இந்தியா
Published: 04:20 GMT, Sep 28, 2017 |
0 Comments
2398
icon_com
This post was written by : Surenth
Jayalalitha

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணைக்குழு அமைக்கப்பட்டு இருப்பதை வரவேற்பதாகவும் இதுவரை தாங்கள் எந்த ஒரு விடயத்தையும் மறைக்கவில்லை என்றும் ஜெயலலிதாவிற்கு சிகிச்சைகளை மேற்கொண்ட அப்பலோ வைத்தியசாலை அறிவித்துள்ளது.

இது குறித்து, நேற்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அந்த வைத்தியசாலையின் நிர்வாக தலைவர் டொக்டர் ஹரி பிரசாத் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “ ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க விசாரணைக்குழு அமைக்கப்பட்டு இருப்பதை வரவேற்கிறோம். நாங்கள் எந்த ஒரு விடயத்தையும் மறைக்கவில்லை. ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணைக்கு, முழு ஒத்துழைப்பு வழங்குவோம்.

ஜெயலலிதா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றது தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் ஏற்கனவே ஒப்படைத்து விட்டோம். மேலும் ஏதேனும் தகவல்கள் எங்களிடம் கேட்டால் அதனையும் வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

ஜெயலலிதாவிற்கு சிகிச்சை வழங்கப்பட்ட அறையில் கண்காணிப்பு கெமரா எதுவும் பொருத்தப்படவில்லை. மருத்துவ அறையில் கண்காணிப்பு கெமரா வைப்பது சட்ட விதிகளுக்கு முரணானது. அதுமட்டுமின்றி தனிமனித சுதந்திரத்தை பறிப்பது போன்றது.

வைத்தியசாலை வளாகத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக கெமரா பொருத்தப்பட்டுள்ளதே தவிர, மருத்துவ அறையில் பொருத்தப்படவில்லை. எனவே, ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சை தொடர்பான எந்த வீடியோ பதிவுகளும் எங்கள் வசம் இல்லை. அவரது கைரேகை தொடர்பான வழக்கு விசாரணையில் இருப்பதால் அது தொடர்பாக எங்களால் எதுவும் கூற முடியாது.” எனவும் அவர் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg