Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பனாமா ஊழல் வழக்கு: ஐஸ்வர்யா ராய் குடும்பத்திற்கு சம்மன்

In இந்தியா
Updated: 04:54 GMT, Sep 28, 2017 | Published: 04:54 GMT, Sep 28, 2017 |
0 Comments
1329
This post was written by : Surenth

பனாமா ஆவண ஊழல் வழக்கில், நடிகை ஐஸ்வர்யா ராய், ஹிந்தி திரையுலக சுப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமலாக்கத்துறையால் சம்மன் அனுப்பப் படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.

முறைகேடான வெளிநாட்டு முதலீடு மற்றும் சொத்து விவரங்களை பனாமா ஆவணம் அம்பலப்படுத்தி வருகின்றது. இந்த நிலையில், தற்போது அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் பெயர்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து விளக்கம் கோரி ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டு, பின்னர் விளக்கம் பெறப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், அமிதாப் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோரிடம் விசாரணைகளை முன்னெடுக்க அமலாக்கத்துறையால் அவர்களுக்கு சம்மன் அனுப்பப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg