Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆயுதப் படை தினத்தில் வடகொரியாவிற்கு- தென்கொரியா வலியுறுத்தல்

In
Updated: 06:07 GMT, Sep 28, 2017 | Published: 06:07 GMT, Sep 28, 2017 |
0 Comments
1418
This post was written by : Risha

அணுவாயுத திட்டங்களை கைவிடுமாறு வடகொரியாவை, தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் வலியுறுத்தியுள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற தென்கொரியாவின் 69ஆவது ஆயுதப் படைத் தின நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் தெரிவித்த அவர், ”வடகொரியாவின் அணுவாயுத அபிலாஷைகளை கட்டுப்படுத்தும் சர்வதேச சமூகத்தின் நடவடிக்கைகளுக்கு தென்கொரியா உயர்மட்ட ஒத்துழைப்பை வழங்கி வருகிறது.

எமது இலக்கில் நாம் தெளிவாக உள்ளோம். நாம் வடகொரியாவின் ஆத்திரமூட்டல்களை நிறுத்த வேண்டியதுடன், அணுவாயுத திட்டங்களை கைவிடுவதற்கு கூடுதல் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

சமாதானத்தை பாதுகாப்பதற்கான நமது அரசாங்கத்தின் உறுதிப்பாடு வல்லமைமிக்க தேசிய பாதுகாப்பு திறன்களை அடிப்படையாகக் கொண்டது.
இந்நிலையில், வடகொரியாவின் இரக்கமற்ற ஆத்திரமூட்டல்கள் வலுவான பதிலடி மூலம் எதிர்கொள்ளப்படும்” என்றும் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg