Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நட்பென்றால் இதுதான்: சேவாக்கிற்கு கார் வாங்கி கொடுத்து அசத்திய சச்சின்

In கிாிக்கட்
Updated: 06:44 GMT, Sep 28, 2017 | Published: 06:43 GMT, Sep 28, 2017 |
0 Comments
3143
icon_com
This post was written by : Anojkiyan
bmw7

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர், தன்னுடைய சக இணைப்பாட்டாளரும் நண்பருமான அதிரடி துடுப்பாட்ட வீரர் விரேந்தர் சேவாக்கிற்கு இந்திய மதிப்பில் 1.14 கோடி ரூபாய் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ காரை பரிசாக கொடுத்துள்ளார்.

இதனை மகிழ்ச்சி பொங்க பெற்றுக்கொண்ட சேவாக், சச்சினுக்கு வாழ்த்துக் கூறி காருடன் கூடிய புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “நன்றி சச்சின் கடவுளே மற்றும் பி.எம்.டபிள்யு. உங்கள் பரிசுக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.

உலகின் மிகச்சிறந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான சச்சின் – சேவாக் கூட்டணி, கிரிகெட்டில் இருந்து ஓய்வு பெற்ற போதிலும் தங்கள் நட்பை தொடர்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதற்கு இந்த பரிசு சிறந்ததொரு சான்று!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg