Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அப்பலோவில் ஜெயலலிதாவை பாா்வையிட்டது யாா்? – நாராயணசாமியின் தகவலினால் பரபரப்பு

In இந்தியா
Published: 08:49 GMT, Sep 28, 2017 |
0 Comments
1327
This post was written by : Surenth

அப்பலோ வைத்தியசாலையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது, ஓ. பன்னீர்செல்வம், தம்பித்துரை ஆகியோர் மாத்திரமே அவரை பார்வையிட்டதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில், இன்று (வியாழக்கிழமை) ஜெயலலிதாவின் மரணம் குறித்து, ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த போது தான் சென்று பார்க்கவில்லை எனவும் அதற்கான அனுமதி தனக்கு கிடைக்கவில்லை எனவும் அவர் கூறினார்.

இந்த நிலையில், பா.ஜ.க.வினர் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் உள்ள ஆளுநர்களை பயன்படுத்தி மத்திய அரசு இடையூறு செய்வதாகவும் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg