Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அல்குர்ஆனிற்காக ஓர் முப்பெரு விழா!

In இலங்கை
Updated: 08:25 GMT, Sep 28, 2017 | Published: 07:28 GMT, Sep 28, 2017 |
0 Comments
1113
icon_com
This post was written by : Puvanes
balli_muslims001

கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் அல்குர்ஆனை மனனம் செய்தவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட போட்டியில் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படவுள்ளது.

குறித்த போட்டியில் தெரிவு செய்யப்பட்ட 500 இற்கு மேற்பட்ட பெண்கள் உட்பட சுமார் 2000 பேர்கள் வரையிலும் பரிசளித்துப் பாராட்டப்பட உள்ளதாக ஹாபிழ்கள் ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்ஹ் எம்.ரீ. அப்துல் காதர் தெரிவித்துள்ளார்.

ஏறாவூர் குல்லியது தாரில் உலூம் அரபுக் கல்லூரி வளாகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஏறாவூர் குல்லியது தாரில் உலூம் அரபுக் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை 30.09.2017 பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்நிகழ்வில் நகர திட்டமிடல் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணத்திலுள்ள அரபிக் கலாசாலைகள், அரபு மத்ரசாக்கள் மற்றும் பள்ளிவாசல் முஸ்லிம் நிறுவனங்களின் பிரதிநிகளும் மார்க்கப் பெரியார்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

batti_al001

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg