Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இனி கிரிக்கெட்டை விட்டு தொலைதூரம் சென்றுவிடுவேன்: கண்ணீருடன் விடைபெற்ற சங்கா

In கிாிக்கட்
Published: 08:37 GMT, Sep 28, 2017 |
0 Comments
4961
This post was written by : Anojkiyan
sanga

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற குமார் சங்ககார, தற்போது முதல் தர கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் விடைபெற்றுள்ள நிலையில், இனிவரும் காலங்களில் கிரிக்கெட்டை விட்டு தொலைதூரம் சென்றுவிடுவேன் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற நடப்பு முதல் தர கிரிக்கெட் தொடரில், சர்ரே அணிக்காக விளையாடிய சங்கா 8 சதங்களை விளாசியதோடு ஐந்து உயரிய விருதுகளையும் தன்வசப்படுத்தினார்.

இந்நிலையில், தனது ஓய்வு குறித்து அவர் கூறுகையில், “இனிவரும் காலங்களில் கிரிக்கெட்டை விட்டு தொலைதூரம் சென்றுவிடுவேன் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், நான் ஓய்வு பெற இதுவே சரியான தருணம் என கருதுகிறேன், நான் இதுவரை விளையாடிய விதத்தை நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளது” என கூறினார்.

முதல்தர டெஸ்ட் போட்டியிலிருந்து சங்ககாரா ஓய்வுபெற்று விட்டாலும், அடுத்தாண்டு வெளிநாடுகளில் நடைபெறவுள்ள ரி-ருவென்ரி தொடர்களில் அவர் பங்கேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg