Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கொழும்புத் தமிழ்ச்சங்கம் நடாத்தும் தொடர் சொற்பொழிவு 2017

In இலங்கை
Published: 10:09 GMT, Sep 28, 2017 |
0 Comments
1057
icon_com
This post was written by : Varothayan
Tamil-Sangam

கொழும்புத் தமிழ்ச்சங்கம் நடாத்தும் தொடர் சொற்பொழிவு நிகழ்வு 2107ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 05, 06, 07ஆம் திகதிகளில் கொழும்புத் தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

இத் தொடர் சொற்பொழிவினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மெய்யியல்துறை சிரேஷ்ட பேராசிரியர் நா.ஞானகுமாரன் நிகழ்த்தவுள்ளார்.

இந் நிகழ்வின் முதல் நாள் 05.10.2017 வியாழக்கிழமை மாலை 6.00 மணிக்கு வணபிதா தனிநாயகம் அடிகளார் அரங்கில் அகில இலங்கை இந்துமாமன்றத் தலைவரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான திரு.கந்தையா நீலகண்டன் அவர்களின் தலைமையில் நடைபெறும்.

தமிழ் வாழ்த்தினை செல்வி.பிரியங்கா ஆன் பிரான்சிஸ் இசைப்பார். “ஒழுக்கவியல் – ஓர் அறிமுகம்” எனும் தலைப்பில் சொற்பொழிவினை நிகழ்த்தவுள்ளார்.

இந் நிகழ்வின் இரண்டாம் நாள் 06.10.2017 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு பண்டிதர் க.பொ.இரத்தினம் அரங்கில் பேராசிரியர் சோ.சந்திரசேகரன் அவர்களின் தலைமையில் நடைபெறும்.

தமிழ் வாழ்த்தினை செல்வி.வைசாலி யோகராசா இசைப்பார். “மனித வாழ்வில் உரிமைகளும், கடமைகளும்” எனும் தலைப்பில் சொற்பொழிவினை நிகழ்த்தவுள்ளார்.

இந் நிகழ்வின் நிறைவு நாள் 07.10.2017 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு கலாநிதி எச்.டபிள்யூ.தம்பையா அரங்கில் கொழும்புத் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.தம்பு சிவசுப்பிரமணியம் தலைமையில் நடைபெறும்.

தமிழ் வாழ்த்தினை செல்வி.நந்தினி சுவாமிநாதன் சர்மா இசைப்பார். “தண்டனையும், அது பற்றிய ஒழுக்கப் பார்வையும்” எனும் தலைப்பில் சொற்பொழிவினை நிகழ்த்தவுள்ளார். நன்றியுரையை கொழும்புத் தமிழ்ச்சங்க கல்விக்குழுச் செயலாளர் திரு.மா.கணபதிப்பிள்ளை அவர்கள் நிகழ்த்துவார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg