Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வடக்கு ஓர் தலைவரை இழந்ததே வித்தியாவிற்கு கொடூர நிலை ஏற்படக் காரணம்!

In இலங்கை
Published: 09:48 GMT, Sep 28, 2017 |
0 Comments
2462
icon_com
This post was written by : Puvanes

இந்த நாட்டில் சிறுபான்மை இனமாகிய தமிழர்களும், முஸ்லிம்களும் ஆட்சி அமைக்க முடியாது. ஆனால் ஆட்சியாளர்களிடம் பேசி எதையும் சாதிக்க முடியும் என மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம்.ரமேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

நோர்வூட் நிவ் வெளி தமிழ் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிட திறப்பு விழா இன்று (வியாழக்கிழமை) இடம் பெற்றது. குறித்த நிகழ்வின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

“சிறுபான்மை இனமான தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பிலும் ஆட்சியாளர்களிடம் பேசி தீர்மானிக்க ஒற்றுமை அவசியம்.

அந்தவகையில் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையில் உள்ள இரு தலைவர்களும் ஒற்றுமைப்பட வேண்டும்.

இன்று சமூக ரீதியாக சிறுபான்மை இனத்தவர்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் தோன்றியுள்ளன. உதாரணமாக இந்த நாட்டு மக்களால் எதிர்பார்க்கப்பட்ட ஒரு மாணவிக்கு நேர்ந்த கொடூரமான செயலுக்கான தீர்ப்பு கிடைக்கப் பெற்றது.

அது புங்குடுதீவு மாணவியான வித்தியாவுக்கு ஏற்பட்ட கொடூரமான செயலாகும். இந்த கொடூர செயலில் ஈடுப்பட்ட 7 பேருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது தான் இந்த நாட்டில் உள்ள தற்போதைய சட்டங்கள். இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் வித்தியாவின் குடும்பத்தாரை சந்தித்து இந்த கொடூர செயலுக்கான நல்ல தீர்வை பெற்றுத் தருவேன் என்றார்.

அதேபோன்று உரிய தீர்ப்பு கிடைத்து விட்டது. இவ்வாறாக பல்வேறு பிரச்சினைகள் நமது சமூகத்தில் தோன்றியுள்ளன.

வடக்கில் முக்கிய தலைவர்கள் பலர் இருந்த காலத்தில் ஒரு நல்ல தலைவரும் இருந்தார். அவரை இழந்ததன் பின்னரே இந்த பாடசாலை மாணவிக்கு இந்த கொடூர செயல் இடம்பெற்றுள்ளது எனவும் ரமேஷ்வரன்” மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க அவர்களின் ஆலோசனைக்கமைய மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சின் 4.8 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் குறித்த கட்டடம் நிர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ், வலய கல்வி பணிப்பாளர், கோட்ட கல்வி பணிப்பாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

school001 school002 school003 school004

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg