Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இந்தியாவிற்கு விரையும் வடக்கு மாகாண சபையின் பதினாறு பேர்!

In இலங்கை
Published: 10:11 GMT, Sep 28, 2017 |
0 Comments
1366
icon_com
This post was written by : Puvanes
india001

வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பதினாறு பேர் கொண்ட குழு எதிர்வரும் 8 ஆம் திகதி புதுடில்லியில் நடைபெறவுள்ள கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்வதற்காக இந்தியா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு மாகாண சபையின் 106 ஆவது அமர்வு கைதடியில் அமைந்துள்ள பேரவை செயலகத்தில் இன்று நடைபெற்றபோது அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் இதனைத் தெரிவித்துள்ளார்

குறித்த குழுவில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான த.குருகுலராஜா, திருமதி அனந்தி சசிதரன், பா.டெனிஸ்வரன், ப.சத்தியலிங்கம், சி. தவராஜா, அ.பரஞ்சோதி, இ. ஆனோல்ட், க.சிவநேசன், சுப்ரமணியம் பசுபதிப்பிள்ளை, பி.சிராய்வா, அ.அஸ்மின், றி.பதியுதீன், கந்தர் தாமோதரம்பிள்ளை லிங்கநாதன், து.ரவிகரன், க.தர்மலிங்கம், சி.அகிலதாஸ் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இந்த கருத்தரங்கு ஆசிய நிறுவனத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg