Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மாகாணசபை உறுப்பினர்கள் வருகை தராத ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்!

In இலங்கை
Published: 10:37 GMT, Sep 28, 2017 |
0 Comments
1287
icon_com
This post was written by : Puvanes
ameerali001

போரதீவுப்பற்றுப் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று (வியாழக்கிழமை) வெல்லாவெளியில் அமைந்துள்ள கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, கிராம அபிவிருத்தித் திட்டங்கள், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட வேலைத்திட்டங்கள், மீள்குடியேற்ற அமைச்சின் வேலைத்திட்டங்கள், வீடமைப்பு, திவிநெகும நிகழ்ச்சித்திட்டம், ஏனைய அமைச்சுக்களின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

மேலும், போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் மின்சார விநியோகம் 100 வீதம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதோடு, சின்னவத்தை ஆனையட்டியவெளி வீதி, மற்றும் திக்கோடை – செல்வாபுரம் வீதி ஆகியவற்றை சம்மந்தப்பட்ட திணைக்களத்தினர் புனரமைப்புச் செய்தல் உட்பட பலதரப்பட்ட விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கிழக்கு மாகாணசபையின் ஆயுட்காலத்தின் கடைசி அமர்வு திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாணசபைக் கட்டடத்தில் நடைபெற்றதனால் இந்த அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் எவரும் சமூகம் தந்திருக்கவில்லை.

குழுத் தலைவர்களான பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் ஆகியோரின் இணைத்த தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், பிரதேச செயலாளர் ந.வில்வரெத்தினம், மற்றும் ஏனைய திணைக்களத் தலைவர்கள், கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ameerali002 ameerali003 ameerali004 ameerali005 ameerali006

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg