Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

நிதி முதலீடுகள் மீதான வரி குறைப்புடன் பிரான்ஸ் வரவு-செலவு திட்டம்

In ஐரோப்பா
Updated: 10:55 GMT, Sep 28, 2017 | Published: 10:55 GMT, Sep 28, 2017 |
0 Comments
1099
icon_com
This post was written by : Risha
france

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் தலைமையிலான ஆட்சியின் முதல் வரவு செலவு திட்டத்திற்கான வரி மற்றும் செலவு குறைப்புகள் என்பன முன்வைக்கப்பட்டுள்ளன.

ஐரோப்பாவில் பிரான்சின் நிதி நம்பகத்தன்மை மீட்டெடுக்கப்படுவதை உறுதிபடுத்தும் வகையில் இச்செலவு குறைப்புகள் நேற்று (புதன்கிழமை) முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வரவு செலவு திட்ட சேமிப்பானது 16 பில்லியன் யூரோக்களை எட்டும் என வரவு செலவு திட்ட அமைச்சர் ஜெரால்ட் தர்மனின் தெரிவித்துள்ளார்.

நிதி முதலீடுகள் மீதான வரி குறைப்பை இடதுசாரி எதிர்ப்பாளர்கள் விமர்சித்த நிலையில், 2018ஆம் ஆண்டு வரவு செலவு திட்டமானது செல்வந்தர்களும், ஏழைகளும் இரு சாராரும் நன்மையடையும் வகையில் அமையும் என அமைச்சர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பேர்லின் மற்றும் பிற ஐரோப்பிய ஒன்றிய தலைநகரங்களை தனது பின்னால் அணி திரட்டுவதற்கு ஜனாதிபதி மெக்ரோன், பிரான்சில் நிதி ஸ்திரத்தன்மையை வெளிப்படுத்துவது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg