Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமாக செயற்படுவது அவசியம்: மே

In
Updated: 11:23 GMT, Sep 28, 2017 | Published: 11:22 GMT, Sep 28, 2017 |
0 Comments
1164
This post was written by : Risha
may

பிரெக்சிற்றின் பின்னர் பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமான பொருளாதார பங்குதாரராக செயற்பட வேண்டியது அவசியமாகும் என பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து வங்கியின் 20 ஆண்டுகால செயற்பாட்டு சுதந்திரத்தை குறிக்கும் வகையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவித்த அவர், ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரித்தானியா வெளியேறும் பட்சத்தில், பிரித்தானியா ஒற்றை சந்தையிலோ அல்லது சுங்க ஒன்றியத்திலோ தொடர்ந்தும் உறுப்பினராக நீடிக்காது.

எனவே, ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமான பொருளாதார கூட்டுறவை ஏற்படுத்தும் வகையில் புதிய கட்டமைப்பை கண்டறிவது அவசியம்.

பிரித்தானிய நிதிச் சந்தைகளானது, ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் வணிக செயற்பாடுகள் மற்றும் நுகர்வோர் உரிமைகள் ஆகியவற்றுக்கு ஆதரவளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg