Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாண்ட்யா மீது தேவையற்ற சுமைகளை திணிக்கக்கூடாது: முன்னாள் தலைவர் அறிவுரை

In கிாிக்கட்
Published: 11:23 GMT, Sep 28, 2017 |
0 Comments
2280
icon_com
This post was written by : Anojkiyan
HArdik-Pandya

கிரிக்கெட் உலகில் அறிமுகமான முதல் அதீத திறமையை வெளிப்படுத்திவரும் இந்திய அணியின் சகலதுறை வீரரான ஹர்திக் பாண்ட்யா மீது சுமைகளை திணிக்கக்கூடாது என அணியின் முன்னாள் தலைவர் கபில்தேவ் கூறியுள்ளார்.

நடைபெற்றுவரும் அவுஸ்ரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடிவரும் பாண்ட்யா குறித்து கபில்தேவ்விடம் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“இந்திய அணியின் சகலதுறை வீரரான ஹர்திக் பாண்ட்யா என்னை விட சிறந்த வீரர். ஆனால் அவர் இன்னும் நிறைய கடினமாக உழைக்க வேண்டி இருக்கிறது.

இப்போது தான் அவர் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கி உள்ளார். நாம் அவர் மீது தேவையற்ற சுமைகளை திணிக்கக்கூடாது. மிகச் சிறந்த வீரராக உருவெடுக்கக்கூடிய திறமை அவரிடம் இருக்கிறது” என கூறினார்.

ஹர்திக் பாண்ட்யா ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகும் போது அவருக்கு தொப்பி அணிவித்து அணிக்கு விளையாடும் அங்கிகாரத்தை கொடுத்தது கபில்தேவ் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg