Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

புதிய உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்க நடவடிக்கை

In இலங்கை
Updated: 11:11 GMT, Sep 28, 2017 | Published: 11:11 GMT, Sep 28, 2017 |
0 Comments
1095
icon_com
This post was written by : Puvanes
yogeshwaran001

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்குவதற்கு மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சு உடனடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய உள்ளூராட்சி மன்றங்கள் அமைப்பது தொடர்பாக நேற்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கும் போது,

மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளை பற்று பிரதேச சபை எல்லைக்குள் கோறளை பற்று மத்திய மற்றும் தெற்கு (கிரான்) என இரண்டு புதிய பிரதேச சபைகள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் கோறளை பற்று பிரதேச செயலக பிரிவிற்கு நகர சபை உருவாக்கப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்றத்திலும் சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சிடமும் நான் பல முறை வலியுறுத்தியுள்ளேன்.

எனது கோரிக்கைகளுக்கு அமைய இதற்கான முறையான அறிக்கைகளை சமர்பிக்க மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சினால் அரசாங்க அதிபர், கிழக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சு செயலாளர், மாவட்ட நில அளவை உதவி அத்தியட்சகர், பிராந்திய உதவி உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் புள்ளி விபர திணைக்கள அதிகாரி ஆகியோரை கொண்ட உயர் மட்ட நிர்வாக குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.

அந்தக் குழுவானது தமது அறிக்கையினை இம்மாத இறுதிக்குள் அமைச்சிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

மேலும், ஏறாவூர்பற்று (செங்கலடி) பிரதேச சபையின் ஒரு பகுதியினை நகர சபையாக மாற்றியும் பதுளை வீதியில் அமைந்துள்ள கிராமங்களை ஒரு பிரதேச சபையாக மாற்ற வேண்டும்.

மண்முனை தென்எருவில் பற்று (களுவாஞ்சிகுடி) பிரதேச சபையினை ஒரு பிரதேச சபை, ஒரு நகர சபை அல்லது இரு பிரதேச சபையாக மாற்றுவதற்கும் மட்டக்களப்பு மாநகர சபையின் ஒரு பகுதியை பிரதேச சபையாகவும் ஏனைய பகுதியை மாநகர சபையாகவும் உருவாக்குவதற்கும் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

இவ்விடயங்களுக்கு உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சு ஆதரவு வழங்கி உறுதி வழங்கியுள்ளதால் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலுக்கு முன் இவைகளை நடைமுறைபடுத்த அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என நான் நம்புகின்றேன்  எனவும் யோகேஸ்வரன் மேலும் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg