Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேசிய கபடிப் போட்டியில் மட்டக்களப்பு அணி சம்பியன்!

In விளையாட்டு
Updated: 17:02 GMT, Sep 28, 2017 | Published: 17:01 GMT, Sep 28, 2017 |
0 Comments
1359
This post was written by : Vithushagan

தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில்   ஆண்களுக்கான கபடிப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட அணி சம்பியன் கிண்ணம் வென்றது.

அனுராதபுரம் பொது விளையாட்டு திடலில் நடைபெற்று வரும் இலங்கை இளையோர் தேசிய விளையாட்டு விழாவின் ஆண்களுக்கான  கபடி போட்டியின் இறுதிப்போட்டி காலி மற்றும் மட்டக்களப்பு அணிகளுக்கிடையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.

இந்த சுற்றுப்போட்டியில் ஆரம்பம் முதல் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி இறுதிப்போட்டிக்கு தெரிவான மட்டக்களப்பு அணி இறுதிப் போட்டியிலும் காலி ஆடவர் அணிக்கு பலத்த சவாலை ஏற்படுத்தி மிகத்திறமையாக வெற்றியை தனதாக்கி கொண்டனர்.

இதில் 31-43   என்ற  என்ற புள்ளிக்கணக்கில் மட்டக்களப்பு மாவட்ட அணி வெற்றி பெற்று இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவானது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg