Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வடகொரிய நிறுவனங்களை மூடவுள்ள சீனா

In உலகம்
Published: 04:41 GMT, Sep 29, 2017 |
0 Comments
1116
icon_com
This post was written by : Risha

சீன பிராந்தியத்தில் செயற்படும் வடகொரிய நிறுவனங்களை மூட வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் உத்தரவை சீனா அமுல்படுத்தியுள்ளது.

அதன்படி, எதிர்வரும் ஜனவரி மாத ஆரம்பத்தில் நிறுவனங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, வடகொரிய- சீன கூட்டு வர்த்தக முயற்சிகளும் மூடப்படவுள்ளன.

பியோங்யாங்கின் ஒரே நட்பு நாடான சீனா, ஏற்கனவே வடகொரியாவுடனான ஆடை வர்த்தகத்தை தடை செய்ததுடன், எண்ணெய் ஏற்றுமதியும் வரையறுக்கப்பட்டது.

இந்நடவடிக்கையானது, வடகொரியாவின் ஆறாவது மற்றும் மிக சக்திவாய்ந்த அணு சோதனைக்கு ஒரு சர்வதேச பதிலிறுப்பாக அமைந்துள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு சபையின் உறுப்பு நாடான சீனா, வடகொரியா மீதான புதிய தடைகளுக்கு கடந்த செப்டம்பர் 11ஆம் திகதி ஏகமனதாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடகொரியா மீதான ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார தடைகளை சீனா முழுமையாக நடைமுறைப்படுத்தியுள்ளதாக வர்த்தக அமைச்சின் செய்தித் தொடர்பாளர் நேற்று அறிவித்திருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg