Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இனவாதச் செயற்பாடுகளால் இலங்கையின் நற்பெயருக்கு களங்கம்: உதுமாலெப்பை

In இலங்கை
Published: 07:52 GMT, Sep 29, 2017 |
0 Comments
1106
icon_com
This post was written by : Ravivarman
unnamed (5)

இலங்கையில் தஞ்சம் அடைந்த ரோஹிங்கிய முஸ்லிம் அகதிகளுக்கு எதிரான மனிதாபிமானமற்ற இனவாதச் செயற்பாடுகளை சில மதத்தலைவர்கள் முன்னெடுத்து வருவதனால் இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது என கிழக்கு மகாண எதிர்க்கட்சி தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

ரோஹிங்ய முஸ்லிம் அகதிகளுக்கான பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும் இவ் இனவாத செயற்பாடுகள் உடன் நிறுத்தப்பட வேண்டும் என்ற அவசரப்பிரேரணையை நேற்று (வியாழக்கிழமை) கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பித்து உரையாற்றியபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து இவர் மேலும் தெரிவிக்கையில்,”மனிதாபிமானமற்ற முறையில் பர்மா நாட்டு முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள், உயிருடன் சித்திரவதைச் செய்யப்பட்டு கொல்லப்படுகின்றனர்.

அந்த நாட்டில் இருந்து தங்களின் உயிர்களை காப்பாற்றுவதற்காக படகு மூலம் அவுஸ்ரேலியா செல்வதற்கு வரும் வழியில் கடல் கொந்தளிப்பால் இலங்கை கடற்பரப்பில் உட்பிரவேசித்தால் நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்ட போது சில பௌத்த மதத்தலைவர்களும், இனவாதிகளும் நேரடியாகச் சென்று இனவாத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

உலகத்தில் யுத்தங்கள், இனப்படுகொலைகள் நடைபெறும் நாடுகளில் இருந்து தங்களின் உயிர்களை பாதுகாப்பதற்காக பல நாடுகளில் தஞ்சம் கோறும் அகதிகளுக்கு அதிக நாடுகள் மனிதாபிமானத்துடன் இடம் வழங்கி பாதுகாப்பும் வழங்கியுள்ளனர்.

நமது நாட்டில் 30 வருட காலம் நடைபெற்ற யுத்தத்தின் கொடுமைகளின் போது நமது நாட்டை சேர்ந்த தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் அகதிகளாக தஞ்சம் கோரிய போது பல நாடுகள் நமது இலங்கை அகதிகளுக்கு இடம் கொடுத்து மனிதாபிமானத்துடன் செயற்பட்டதனை நாம் மறந்து விட முடியாது.

நமது நாட்டில் வாழும் சிங்கள மக்கள் அரசியல் தலைவர்கள் 95 வீதமானோர் இனவாதத்திற்கு எதிரானவர்கள் என்பது யதார்த்தமாகும்” என எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg