Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஐரோப்பாவை பாதுகாக்க பிரித்தானியா நிபந்தனையற்ற முறையில் செயற்படும்

In
Published: 08:10 GMT, Sep 29, 2017 |
0 Comments
1169
icon_com
This post was written by : Risha

ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறிய பின்னர், ஐரோப்பாவை பாதுகாப்பதற்காக பிரித்தானியா நிபந்தனையற்ற முறையில் செயற்படும் என பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுப்பதற்கு ஒன்றிணைய வேண்டிய தேவையை மேற்கோள்காட்டி பிரதமர் இன்று (வெள்ளிக்கிழமை) இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், ”ஐரோப்பாவின் பாதுகாப்பை நிபந்தனையற்ற முறையில் பேணுவதற்கு பிரித்தானியா கடமைப்பட்டுள்ளது. அதன்படி, ஆயுததாரிகளின் ஆக்கிரமிப்பு, பயங்கரவாதம், இயற்கை அல்லது மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவுகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கு நிவாரணங்களையும் உதவிகளையும் வழங்குவோம்.

மேலும், ஐரோப்பியர்களின் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை ஆகியவற்றை காப்பது நமது உறுதிப்பாடு என்ற போதிலும், நமது கடமையின் மூலமே அது சாத்தியமாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg