Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் தேடப்பட்டுவந்தவர் பிரம்டனில் கைது!

In கனடா
Published: 10:00 GMT, Sep 29, 2017 |
0 Comments
1184
icon_com
This post was written by : Anojkiyan
aree

கொலை முயற்சி மற்றும் ஆட்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் தேடப்பட்டுவந்த லண்டன் பகுதியைச் சேர்ந்த சேவன் டெனிஸ் என்பவர் பிரம்டனில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சேவன் டெனிஸ் என்பவர் கடந்த மாதம் 3ஆம் திகதி, 19 வயது பெண் ஒருவரை துப்பாக்கி முனையில் மிரட்டி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்த நிர்ப்பந்தித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் கடந்த மாதம் 5ஆம் திகதி அதிகாலை வேளையில், பிரம்டனில் வைத்து 20 வயதான தனது உறவினர் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அவர் மீது கடத்தல், தாக்குதல், தடுத்து வைத்தல், கொலை முயற்சி, ஆயுத பயன்பாடு, பாலியல் வன்முறை உள்ளிட்ட பத்துக்கும் அதிகமான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், இவர் தொடர்பில், அல்லது இந்த சம்பவங்கள் தொடர்பில் மேலதிக தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg