Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிரியாவில் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யாவின் முயற்சி

In உலகம்
Updated: 10:52 GMT, Sep 29, 2017 | Published: 10:51 GMT, Sep 29, 2017 |
0 Comments
1313
This post was written by : Risha

சிரியாவின் வடக்கு மாகாணமான இட்லிப்-இல் பல ஆண்டுகாலமாக நீடித்துவரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவர போர் தவிர்ப்பு வலயங்களை ஏற்படுத்துவது அவசியம் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

துருக்கி தலைநகர் அங்காராவில், நேற்று (வியாழக்கிழமை) துருக்கி ஜனாதிபதியுடன் இணைந்து கூட்டாக ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், ஜிஹாதிஸ்டு கட்டுப்பாட்டின் கீழுள்ள இட்லிப் மாகாணத்தில் போர் தவிர்ப்பு வலயத்தை ஏற்படுத்துவதில் தீவிரம் காட்ட வேண்டியுள்ளது.

சிரியாவில் வன்முறை நீடித்துவரும் பகுதிகளில் சுமூகமான நிலைமையை ஏற்படுத்துவது அவசியமாகும். சிரிய மக்கள் வழமைக்கு திரும்புவதற்கு இது முக்கியமானதாகும்.

சிரியாவில் நான்கு போர் தவிர்ப்பு வலயங்களை உருவாக்குவது தொடர்பில் கசகஸ்தான் தலைநகர் அஸ்டானாவில் இடம்பெற்ற சமாதான பேச்சுவார்த்தையின் போது மொஸ்கோவிற்கும்- அங்காராவிற்கும் இடையே ஒப்புகொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg