Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தோல்வியின் வலி! – பயிற்சியாளரை அதிரடியாக நீக்கியது முனிச்

In உதைப்பந்தாட்டம்
Published: 10:41 GMT, Sep 29, 2017 |
0 Comments
1159
This post was written by : Sujitharan
download

தோல்வி கொடுத்த வலியுடன் தன் பயிற்சியாளரை அதிரடியாக நீக்கியுள்ளது ஜேர்மனியின் முன்னணிக் கால்பந்துக் கழகமான பயர்ன் முனிச்.

பயர்ன் முனிச்சின் (Bayern Munich) பயிற்றுவிப்பாளராக கடந்த பருவகாலம் முதல் செயற்பட்டு வந்த கார்லோ அன்ஸலோட்டி அந்த பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமை நடைபெற்ற UEFA சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான போட்டியொன்றில் முனிச் அணி, பரிஸ் செய்ண்ட் ஜெய்ன்ட் அணியிடம் மோசமான முறையில் தோல்வியடைந்தது

இவ்விரு அணிகளுக்கிடையில் நடைபெற்ற அந்த போட்டியில், பயர்ன் முனிச் 0-3 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததன் பின்னர், முனிச் நிர்வாகம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.

கார்லோவின் பதவி விலக்கப்பட்ட தகவலை பயர்ன் முனிச் கழகம் தமது உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg