Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சூதாட்டத்தில் இலங்கை? – நம்பமுடியவில்லை என்கிறார் சிம்பாப்வே தலைவர்!

In கிாிக்கட்
Published: 11:05 GMT, Sep 29, 2017 |
0 Comments
2400
icon_com
This post was written by : Sujitharan
zimbabwe-vs-sri-lanka-m

இலங்கை கிரிக்கட அணி ஒருபோதும் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டிருக்காது என, சிம்பாப்வே கிரிக்கட் அணியின் தலைவர் கிரேம் கிரீமர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இலங்கை அணி மீதான ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டை சிம்பாப்வே ஒருபோதும் நம்பாது என்றும் கூறியுள்ளார்.

கடந்த ஜுன் மாதம் இலங்கைக்கு கிரிக்கட் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த சிம்பாப்வே அணியிடம் தோல்வியடைந்த இலங்கை அணி குறித்து கடும் விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இலங்கை அணி தன் தாய் மண்ணில் சிம்பாப்வேயுடன் மோதிய ஒருநாள் தொடரை 2-3 என இழந்தது.

இந்த தொடரில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுக்களும், கடும் விமர்சனங்களும் வெளியிடப்பட்டு வந்த போதிலும், அதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரையில் முன்வைக்கப்படவில்ல.

இவ்வாறான ஒரு நிலையில், சிம்பாப்வேயின் தலைநகர் ஹராரேயில் வைத்து கருத்து வெளியிட்ட சிம்பாப்வே கிரிக்கட் அணியின் தலைவர் கிரீமர், இலங்கை வீரர்கள் ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட்டருக்க மாட்டார்கள் என்றும், அந்த குற்றச்சாட்டை தான் நம்பவில்லை என்றும் கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg