Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புருவ முடியை அடர்த்தியாக வேண்டுமா?

In
Updated: 11:15 GMT, Sep 29, 2017 | Published: 11:15 GMT, Sep 29, 2017 |
0 Comments
1331
This post was written by : Anojkiyan

புருவ முடியை அடர்த்தியாக பலர் செயற்கையான முறைகளை கையாள்கின்றனர். ஆனால் இம்முறையின் ஊடாக விரைவில் பயன்பெற்றாலும் பிற்காலத்தில் ஆபத்திலேயே முடிகின்றது.

எனவே நாம் தற்போது இயற்கை முறையில் புருவ முடியை அடர்த்தியாக்குவது எப்படி என பார்க்கலாம்…

முறை 01– ஒரு பஞ்சை எடுத்து விளக்கெண்ணெயில் நனைத்து, புருவத்தில் தடவவும். விரல் நுனியை கொண்டு 2-3 நிமிடம் நன்றாக மசாஜ் செய்யவும். 30 நிமிடங்கள் விடவும். பின்பு வெது வெதுப்பான நீரில் கழுவவும். தினமும் ஒரு முறை இதனை செய்யலாம். குறிப்பாக இரவு படுப்பதற்கு முன் இதனை செய்யலாம்.

முறை 02– இரவு நேரத்தில் சில துளி தேங்காய் எண்ணெய்யை எடுத்து உங்கள் புருவத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். மசாஜ் செய்வதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் முடி வளர்ச்சி அதிகரிக்கிறது. இரவு முழுதும் அப்படியே விட்டு விடவும். மறுநாள் காலை, வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். சில மாதங்கள் தொடர்ந்து இதனை செய்வதால் நல்ல மாற்றம் தெரியும்.

முறை 03– ஒலிவ் எண்ணெய் சில துளிகள் எடுத்து புருவத்தில் தடவவும். நன்றாக மசாஜ் செய்யவும். இரவு முழுவதும் அப்படியே விடலாம் அல்லது 30 நிமிடங்கள் கழித்து கழுவலாம். அல்லது ஒலிவ் எண்ணெயுடன் தேன் சேர்த்து புருவத்தில் தடவலாம். நன்றாக மசாஜ் செய்து 10 நிமிடங்கள் கழித்து நீரில் கழுவலாம். தினமும் இதனை செய்வதால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg