Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஆப்கான் தலைநகரில் தற்கொலை தாக்குதல்: பலர் உயிரிழப்பு

In உலகம்
Published: 11:05 GMT, Sep 29, 2017 |
0 Comments
1128
icon_com
This post was written by : Risha

ஆப்கான் தலைநகர் காபுலில் உள்ள பெரிய ஷியா மசூதிக்கு அருகே தற்கொலை குண்டுதாரிகள் மேற்கொண்ட தாக்குதலில் பலர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) குறித்த தாக்குதல் இடம்பெற்றிருந்த நிலையில், தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பில் சரியான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.

குறித்த மசூதியில் புனித நிகழ்வொன்று இடம்பெற்றுவந்த நிலையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், அதனையும் மீறி இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதேவேளை பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட பதில் தாக்குதலில் தாக்குதல்தாரிகள் இருவர் கொல்லப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

காபுலில் உள்ள வேறொரு மசூதியை இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்ட சம்பவம் இடம்பெற்று ஒரு மாதத்தில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg