Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்திற்கான தொழில்நுட்ப ஆய்வு கூடம் திறந்துவைப்பு!

In இலங்கை
Published: 12:33 GMT, Sep 29, 2017 |
0 Comments
1168
icon_com
This post was written by : Ravivarman
IMG_8073

கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்திற்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வு கூடத்தை இன்று (வெள்ளிக்கிழமை) இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வு இன்று பிற்பகல் 1 மணியளவில் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

அத்துடன், நிகழ்வில் பாடசாலை வளப் பற்றாக்குறை தொடர்பில் மாணவர்களால் அமைச்சரிடம் கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

தொடர்ந்து அமைச்சர் இந்நிகழ்வில் உரையாற்றுகையில், “பாடசாலை வளப்பற்றாக்குறை தொடர்பிலும், ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொண்டராசிரியர் நியமனம் வழங்கப்படுவதற்கு சிலர் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், ஏனையவர்களிற்கு பரீட்சை மூலம் தெரிவு செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படவுள்ளன.

அத்துடன் இன்று மாணவர்களால் என்னிடம் வழங்கப்பட்டுள்ள கோரிக்கைகள் குறித்தும் எதிர்காலத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என அமைச்சர் இராதாகிருஸ்ணன் மேலும் தெரிவித்தார்.

IMG_8055 IMG_8054 IMG_8049 IMG_8040 IMG_8036 IMG_8032 IMG_8030 IMG_8024 IMG_8012 IMG_8009 IMG_8006

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg