Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பஷில் கிளிநொச்சிக்கு திடீர் விஜயம்!

In இலங்கை
Updated: 17:12 GMT, Sep 29, 2017 | Published: 13:00 GMT, Sep 29, 2017 |
0 Comments
1898
This post was written by : Ravivarman

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இன்று (வெள்ளிக்கிழமை) கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விஜயம் செய்துள்ளதுடன் அப்பிரதேச மக்களையும் சந்தித்துள்ளார்.

இன்று மாலை முறிகண்டி பிள்ளையார் ஆலயத்தில் முல்லைத்தீவு மாவட்ட லங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர்களால் அவரிற்கு வரவேற்பளிக்கப்பட்டது.

தொடர்ந்து முறிகண்டி பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட வழிபாட்டில் கலந்து கொண்ட பஷில் ராஜபக்ஷ தொடர்ந்து மக்கள் சந்திப்பிலும் ஈடுபட்டார்.

இதன்போது அங்கு உரையாற்றிய அவர், “இன்று விவசாயிகள் தமது உற்பத்திகளை விற்பனை செய்வதில் பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். நான் இன்று அல்ல பல தடவைகள் இப்பகுதிகளிற்கு வருகை தந்துள்ளேன்.

புகையிரத பாதை அமைத்தல், ஏ9 வீதி அமைத்து திறத்தல் உள்ளிட்ட பல அபிவிருத்தித் திட்டங்கள் எம்மால் முன்னெடுக்கப்பட்டன. பிரச்சினைகளை எதிர்கொள்ளும் விவசாயிகளிற்கு தீர்வை பெற்றுக்கொடுப்போம்” என   பஷில் ராஜபக்ஷ  தொிவித்தாா்.

இதேவேளை குறித்த சந்திப்பின் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் ஒருவர் கண்ணீருடன் பஷில் ராஜபக்ஷவிடம் தனது பிள்ளையை மீட்டு தருமாறு கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

IMG_8129 IMG_8127 IMG_8114 IMG_8113 IMG_8103 IMG_8100 IMG_8092

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg