Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மேயாத மான் திரைப்படத்தின் இசை வெளியீடு

In சினிமா
Updated: 16:01 GMT, Sep 29, 2017 | Published: 16:01 GMT, Sep 29, 2017 |
0 Comments
1272
This post was written by : Surenth

கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் மற்றும் த.முருகானந்தமின் ரொக்ஃபோர்ட் என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள “மேயாத மான்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் இடம்பெற்றது.

குறித்த இசை வெளியீட்டு விழா லயோலா கல்லூரியில் நடைபெற்றது. இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 7 பாடல்களும் வெளியாகியுள்ளன.

லயோலா கல்லூரி மாணவர்களின் ‘Ovations’ நிகழ்ச்சிக்கு இடையே ‘மேயாத மான்’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்ட நிலையில் படக்குழுவினரும் இந்த விழாவில் பங்குபெற்றனர்.

சென்னையில் நடக்கும் காதல் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள, இந்தத் திரைப்படத்தில் சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமான ப்ரியா பவானி சங்கர், பெரிய திரையில் காலடிஎடுத்து வைக்கும் இந்தப் திரைப்படத்திற்கும் சந்தோஷ் நாராயணனும், பாடகர் பிரதீப் குமாரும் இணைந்து இசை அமைத்துள்ளனர். அறிமுக இயக்குநரான ரத்னகுமார் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg