Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அமெரிக்காவின் சுகாதார விவகாரங்களுக்கான செயலாளர் இராஜினாமா

In உலகம்
Published: 04:39 GMT, Sep 30, 2017 |
0 Comments
1104
icon_com
This post was written by : Suganthini

அமெரிக்காவின் சுகாதார மற்றும் மனிநேய விவகாரங்களுக்கான செயலாளர் ரொம் பிரைஸ் ஊழல் குற்றச்சாட்டொன்றில் சிக்கியுள்ள நிலையில், அவர் தனது பதவியை நேற்று (வெள்ளிக்கிழமை) இராஜினாமாச் செய்துள்ளார்.

இந்நிலையில் அவரது வெற்றிடத்துக்கு, சுகாதார விவகாரங்களுக்கான உதவிச் செயலாளராகப் பணியாற்றிவந்த டொன் ஜே ட்ரைட் நியமிக்கப்பட்டுள்ளார்.

தனது உத்தியோகபூர்வ பயணங்களுக்காக விலை உயர்ந்த தனியார் ஜெட் விமானங்களைப் பயன்படுத்தியமை தொடர்பான ஊழல் குற்றச்சாட்டு ரொம் பிரைஸ் மீது முன்வைக்கப்பட்டுள்ளது.

நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களைக் கையாளும் அலுவலர்களைத் தவிர, மற்றவர்கள் தங்கள் பணி தொடர்பான பயணங்களை வணிக விமானங்களில் மேற்கொள்ள வேண்டும் என்ற கொள்கை அமெரிக்காவில் உள்ளது.

இதை மீறிய இவர், தனது அலுவலகப் பயணங்களுக்காக கடந்த மே மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 24 தடவைகள் தனியார் ஜெட் விமானங்களைப் பயன்படுத்தியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரொம் பிரைஸின் இராஜினாமாவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏற்றுக்கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் சாரா ஹக்கபி சண்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg