Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ட்ரம்ப்

In உலகம்
Published: 06:08 GMT, Sep 30, 2017 |
0 Comments
1203
icon_com
This post was written by : Suganthini
trump2

வடகொரியாவின் அணுவாயுதத் திட்டம் தொடர்பான அச்சுறுத்தல் அதிகரித்துவரும் சூழ்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முதல் தடவையாக ஆசிய நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளார்.

இந்நிலையில், எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி முதல் 14ஆம் திகதிவரை தனது பாரியார் மெலனியாவுடன் ஆசிய நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தை அமெரிக்க ஜனாதிபதி மேற்கொள்ளவுள்ளார் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜப்பான், தென்கொரியா, சீனா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கே அமெரிக்க ஜனாதிபதி செல்லவுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தனது விஜயத்தின்போது, வியட்நாமில் நடைபெறவுள்ள ஆசிய பசுபிக் பொருளாதாரக் கூட்டுறவு அமைப்பின் மாநாட்டிலும் பிலிப்பைன்ஸில் நடைபெறவுள்ள தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான மாநாட்டிலும் அவர் கலந்துகொள்வார் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதைத் தொடர்ந்து, ஆசிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளமை இதுவே முதல் தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg