Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நடிகை சென்ற கார் விபத்து: சேத விபரமும் வெளியிடப்பட்டது!

In சினிமா
Published: 06:50 GMT, Sep 30, 2017 |
0 Comments
1518
This post was written by : Surenth
Vidya Balan

இந்திய சினிமா நடிகை வித்தியாபாலன்  சென்ற கார் மும்பையில் நேற்று விபத்துக்குள்ளானதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் அவர் காரில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கார் மோதியே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தின் போது, இரண்டு கார்களிலும் பயணித்த எவருக்கும் எந்த ஒரு சேதமும் ஏற்பட வில்லை எனவும் வித்தியாபாலன் சென்ற கார் மாத்திரமே சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பொலிவுட் நடிகை வித்தியாபாலன், ஹிந்தியில் வெளிவந்த “த டர்டி பிக்சர்ஸ்” “கஹானி” ஆகிய திரைப்படங்கள் மூலம் திரையுலகில் பேசப்பட்டவர். அவர் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள “தும்ஹரி சலூ” என்ற திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg