Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொரிய தீபகற்ப நெருக்கடிக்கு தீர்வு காண தயார் – ரஷ்யா

In
Updated: 08:39 GMT, Sep 30, 2017 | Published: 08:39 GMT, Sep 30, 2017 |
0 Comments
1411
This post was written by : Suganthini

கொரிய தீபகற்பம் மீதான நெருக்கடிக்கு தீர்வு காணும் முயற்சியில், வடகொரியாவுடன் இணைந்து ஒத்துழைப்பதற்கு தாம் தயார் என, ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்யத் தூதுவர் ஒலெக் பர்மிஸ்ட்ரோவ்க்கும் (Oleg Burmistrov)  வடகொரிய வெளிவிவகார அமைச்சினுடைய வட அமெரிக்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சோ சான் குயீக்கும் Choe Son-hui) இடையில் நேற்று (வெள்ளிக்கிழமை) சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டபோதே, மேற்கண்டவாறு ரஷ்ய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரிய தீபகற்பத்தில் நிலவும் பிரச்சினையை தீர்ப்பதற்காக அரசியல் மற்றும் இராஜதந்திர வழிமுறைகளைக் கையாண்டு தீர்வு காண்பதற்கு ரஷ்யா ஆர்வமாகவுள்ளதாகவும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சு மேலும் கூறியுள்ளது.

வடகொரியாவின் அணுவாயுதம் மற்றும் ஏவுகணைப் பரிசோதனைகளால் வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் முரண்டுபாடு தோன்றியுள்ள நிலையில், ரஷ்யா இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg