Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாடசாலை சமூகத்தின் ஆட்சேபனை காரணமாகவே வைரவிழா பிற்போடப்பட்டது: இரவீந்திரன்

In இலங்கை
Updated: 08:53 GMT, Sep 30, 2017 | Published: 08:53 GMT, Sep 30, 2017 |
0 Comments
1212
This post was written by : Ravivarman

கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தின் பாடசாலைச் சமூகத்தின் ஒரு பகுதியினரின் ஆட்சேபனை காரணமாக, மாகாண கல்வி அமைச்சின் பணிப்புக்கமைய வைர விழாவை ஒத்தி வைக்குமாறு கடிதம் அனுப்பட்டுள்ளது என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இராசு இவீந்திரன் தெரிவித்துள்ளார்.

இராமநாதபுரம் பாடசாலையின் வைர விழா ஒத்திவைக்கப்பட்டது தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் நேற்றையதினம் (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் இரண்டாம் திகதி கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தின் வைர விழாவை நிகழ்வுகள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் கல்வி அமைச்சின் செயலாளரின் கடிதம் மூலம் விழாவினை பிறிதொரு தினத்தில் ஒத்தி வைக்குமாறு கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளருக்கு ஊடாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதேவளை மாகாண கல்வி ஆலோசனைக் கூட்டத்திலும் கல்வி அமைச்சரால் குறித்த விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்ட போது கூட்டத்தில் கலந்துகொண்ட மாகாண சபை உறுப்பினர்களும் வைர விழாவை பிரிதொரு திகதியில் நடத்துவதற்கே ஆலோசனை வழங்கியதாகவும் அதன்படியே கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg