Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பாதுகாப்பற்ற புகையிரதக்கடவை: அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்!

In இலங்கை
Published: 10:32 GMT, Sep 30, 2017 |
0 Comments
1134
icon_com
This post was written by : Ravivarman

முறிகண்டி ஊடாக அக்கராயன்குளம் செல்லும் பிரதான வீதியில் அமைந்துள்ள புகையிரத கடவைக்கான பாதுகாப்பு சமிக்ஞை விளக்கு ஒளிராமையால் மக்கள் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.

இக் கடவைக்கு அருகில் பாடசாலை ஒன்று காணப்படும் நிலையில், குறித்த சமிக்ஞை விளக்கு அடிக்கடி இவ்வாறு பழுதடைவதால் நாளாந்தம் அச்சத்துடனேயே பயணிக்க வேண்டி உள்ளதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.

மேலும் குறித்த வீதியை  நாளாந்தம் பல்வேறு கிராமங்களிற்குச் செல்வதற்கு மக்கள் பயன்படுத்திவரும் நிலையில், புகையிரத விபத்துக்கள் ஏற்படும் என்ற அச்சம் காணப்படுவதாகவும், ஏற்கனவே குறித்த பகுதியில் இரு விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

எனவே குறித்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சமிக்ஞை விளக்கை அகற்றி, பாதுகாப்பான புகையிரதக் கடவை ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துத் தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg