Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பூதாகரமாக வெடிக்கும் மரண சர்ச்சை! – பதற வைக்கும் பத்து கேள்விகள்

In இந்தியா
Updated: 11:59 GMT, Sep 30, 2017 | Published: 11:11 GMT, Sep 30, 2017 |
0 Comments
1708
icon_com
This post was written by : Puvanes
jeya_death_stalin001

மத்திய புலனாய்வுத் துறை போன்ற தன்னாட்சி அமைப்பின் மூலமாகவே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள பல்வேறுபட்ட உண்மைகள் வெளிப்படுத்தப்படும் என தி.மு.கவின் செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் மீண்டும் சர்ச்சைகள் பூதாகரமாக வெடித்துவரும் நிலையில் இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றின் மூலமாகவே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் பத்து பிரதான கேள்விகளை ஸ்டாலின் முன்வைத்துள்ளார். அவர் முன்வைத்துள்ள கேள்விகள் வருமாறு,

01. மத்திய அரசின் இசட் பிளஸ் என்ற உயர் பாதுகாப்பு பிரிவில் இருந்த ஜெயலலிதாவிற்கு அம்பியூலன்ஸ் வண்டி கொடுக்கப்படவில்லையா? அவரை தனியார் மருத்துவமனை அம்பியூலன்ஸ் வண்டியில் அழைத்துச் சென்றது ஏன்?

02. சக்கரை அளவும், இதயத்துடிப்பும் அதிகரித்து ஆக்ஜிசன் குறைப்பாட்டால் மயங்கிய முதல்வரை மருத்துவமனையில் அனுமதித்த பின்னர், அவருக்கு காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை விடுத்தது ஏன்? அதற்கு காரணம் யார்?

03. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதி தீவிர சிகிச்சைகள் பெற்றுவந்த ஜெயலலிதா காவிரி பிரச்சினை தொடர்பில் ஆலோசனை நடத்தியதாக அரசு அறிக்கை வெளியிட்டது ஏன்?

04. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த தமிழக முன்னாள் முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவது அவரின் உடல் நலத்தில் அக்கறை காட்டும் சிகிச்சை முறையா? இது தொடர்பில் அரசு வெளியிட்ட அறிக்கைக்கு துணையாகவிருந்த அதிகாரிகள் யாவர்?

05. அவரது பாதுகாப்புப் பிரிவில் இருந்த பாதுகாப்பு படையினர் 75 நாட்கள் எங்கே சென்றிருந்தனர்? அந்த 75 நாட்களும் அவர்கள் ஆற்றிய பணி தொடர்பில் உள் துறைக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா? ஜெயலலிதாவின் உடல் நலன் தொடர்பில் மத்திய அரசிற்கு முழுமையாக தெரிந்திருந்ததா?

06. ஆளுநரும் மத்திய அமைச்சர்களும் கூட ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கப்படவில்லை எனக் கூறும் மாநில அமைச்சரின் கருத்துக்கு ஆளுநர் மாளிகை தரும் பதில் என்ன? அக்டோபர் முதலாவது வாரத்தின் பின்னர் ஜெயலலிதாவை சசிகலாவும் பார்க்கவில்லை என தினகரன் தெரிவித்துள்ள நிலையில், இடைத்தேர்தல் விண்ணப்பங்களில் முதல்வரின் கைரேகைகள் பதிவானது எவ்வாறு?

07.குறித்த விண்ணப்பங்களில் கைரேகை பதிக்கும் நிலையில் இருந்த அவர், வாக்காளர்களுக்கு விடுத்த அறிக்கையில் கையெழுத்து இட்டது எவ்வாறு? அவரின் கையெழுத்தை மோசடியாக போடக்கூடியவர்கள் உள்ளார்களா? அப்படியாயின் எத்தனை முறைகள் இவ்வாறு கையெழுத்து போடப்பட்டுள்ளன?

08. அதிதீவிர சிகிச்சை பெற்ற நிலையில் கடுமையான நோய்த்தொற்றுடன் இருந்த அவர், தனது இலாக்காக்களை எவ்வாறு மாற்றுவதற்கு ஒப்புதல் அளித்தார்?

09. ஜெயலலிதாவின் மரணச் செய்தி அறிவிக்கப்பட்ட பின்னர் நள்ளிரவு கடந்த வேளையில் இடைக்கால அமைச்சரவைக்கு பதில், பன்னீர்செல்வம் தலைமையில் உடனடி அமைச்சரவை பதவியேற்றுக்கொண்டதற்கான காரணம் யாது?

10. பதவிக்காகவே ஜெயலலிதாவிற்கு தொடர்ந்து 75 நாட்களும் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டு வந்ததா?

போன்ற 10 கேள்விகளை ஸ்டாலின் தனது அறிக்கையினூடாக கேட்டுள்ளதோடு, இவை தனது தனிப்பட்ட கேள்விகள் அல்ல எனவும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களினதும், ஜெயலலிதாவின் தொண்டர்களும் எழுப்பும் கேள்விகள் எனவும் ஸ்டாலின் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg