Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நோபல் பரிசுக்காக மெர்கலின் பெயர் பரிந்துரை

In ஐரோப்பா
Published: 11:32 GMT, Sep 30, 2017 |
0 Comments
1104
This post was written by : Suganthini
germany

ஜேர்மனியில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று நான்காவது தடவையாகவும் அதிபராகியுள்ள அங்கேலா மெர்கலின் பெயர், சமாதானத்துக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அகதிகளுக்கான கொள்கைத் திட்டமொன்று தொடர்பில் அவர் முன்வைத்துள்ள நிலையிலேயே, இந்த வருடத்துக்கான நோபல் பரிசுக்காக இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோதல் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான குடியேற்றவாசிகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தஞ்சம் கோரி வருகின்றனர். இந்நிலையில், அகதிகளுக்கான கொள்கைத் திட்டத்தை முன்வைத்தமைக்காக அங்கேலா மெர்கல் பாராட்டு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், கடந்த 2015ஆம் ஆண்டில் 8 இலட்சத்து 90 ஆயிரம் குடியேற்றவாசிகள் ஜேர்மனிக்குள் நுழைந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி ஒஸ்லோவில் நோபல் பரிசு பற்றிய விபரம் அறிவிக்கப்படும் என்பதுடன், 1.12 மில்லியன் டொலர் பெறுமதியான பரிசு எதிர்வரும் டிசெம்பர் 10ஆம் திகதி மாதம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg