Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அச்சுறுத்தல் இல்லாதோரை நாட்டிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை

In கனடா
Updated: 11:38 GMT, Sep 30, 2017 | Published: 11:38 GMT, Sep 30, 2017 |
0 Comments
2568
icon_com
This post was written by : Risha
cana

உண்மையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளவர்கள் மாத்திரமே கனடாவிற்குள் அனுமதிக்கப்படுவர் என்றும் அல்லாதோர் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டில் மாத்திரம் சுமார் 32 ஆயிரம் பேர் கனடாவிற்குள் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த எண்ணிக்கையானது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 24 ஆயிரம் அதிகமாகும்.

இவ்வாறு கனடாவிற்குள் வந்தவர்களுள் 13 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கியுபெக் எல்லையூடாக சட்டவிரோதமாக பயணித்தவர்களாவர் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இவர்கள் குறித்து கவனத்தில் கொள்ளப்பட்டு உண்மையாக பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளவர்களை தவிர்த்து ஏனையோரை நாட்டைவிட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியா ஊடாக பயணித்த ஒன்பது பேர் இதுவரை திருப்பி அனுப்பப்பட்டுள்ள அதேவேளை, கியுபெக் எல்லையூடாக வந்தவர்களில் திருப்பி அனுப்பப்பட்டவர்களின் எண்ணிக்கை வெளியிடப்படவில்லை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg