Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீன வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர்

In உலகம்
Published: 12:08 GMT, Sep 30, 2017 |
0 Comments
1110
This post was written by : Suganthini

எதிர்வரும் நவம்பர் மாத முற்பகுதியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் சீனாவுக்கான விஜயத்தை முன்னிட்டு, சீன வெளிவிவகார அமைச்சர் ஜி வாங் மற்றும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ரெக்ஸ் ரில்லர்ஸனுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

பீஜிங்கில் இன்று (சனிக்கிழமை) இந்தச் சந்திப்பின்போது, அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப்பின் விஜயமானது, அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவில்  முக்கியமானதொன்றாகக் கருதப்படுகின்றது என, சீன வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இந்நிலையில், கொரிய தீபகற்ப விவகாரம், இருதரப்பு வர்த்தக உறவு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இரு நாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg