Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்சிற்: அடுத்த கட்ட பேச்சுவார்த்தை அதிசயமானது

In
Updated: 12:35 GMT, Sep 30, 2017 | Published: 12:35 GMT, Sep 30, 2017 |
0 Comments
1177
This post was written by : Suganthini

பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான எதிர்கால வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் விவாதிப்பதற்கான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை அதிசயமானது என, ஐரோப்பிய ஒன்றிய ஆணையகத்தின் தலைவர் ஜீன் க்குளோட் ஜங்கர் (Jean-Claude Juncker) தெரிவித்துள்ளார்.

எஸ்தோனியாவில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றபோது நேற்று (வெள்ளிக்கிழமை) அவர் இதனைக் கூறியுள்ளார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதியில் பிரெக்சிற் விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதன்போது, பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் ஏதாவது அதிசயம் நடந்தாலொழிய, போதியளவான முன்னேற்றங்கள் கிடைக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.

பிரெக்சிற்றுக்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் எதிர்கால வர்த்தக ஒப்பந்தத்தை தொடர்வதற்கு விருப்பம் தெரிவித்திருந்த பிரித்தானியா, அதற்கான கோரிக்கையை ஐரோப்பிய ஒன்றியத்திடம் அண்மையில் விடுத்திருந்தது.

இந்தக் கோரிக்கைக்கமைய, வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஒக்டோபர் மாதம் ஐரோப்பிய ஒன்றியப் பேரவை முடிவு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg