Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விவசாயிகள் இனித் தேவையில்லை! – நூற்றாண்டு காலமாக தொடர்ந்து வந்த பிணைப்பு துண்டிப்பு

In அறிவியல்
Updated: 12:56 GMT, Sep 30, 2017 | Published: 12:56 GMT, Sep 30, 2017 |
0 Comments
1309
This post was written by : Puvanes

விவசாயிகளின் உதவிகள் இன்றி தானியங்கி இயந்திரங்கள் மூலம் செய்யப்படும் விவசாயத்தினை முதற்தடவையான இங்கிலாந்து ஆய்வாளர்கள் நிகழ்த்தியுள்ளனர்.

இங்கிலாந்தின் ஹார்பர் ஆடம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தன்னிச்சையாக இயங்கும் டிராக்டர்கள் மற்றும் ட்ரோன்களின் மூலமாக இந்தவகையில் நவீன விவசாயத்தினை நடத்தியுள்ளனர்.

பல நூற்றாண்டு காலமாக மனிதர்களாலேயே மேற்கொள்ளப்பட்டுவரும் விவசாயத்தில் இந்த புதிய முயற்சியானது ஓர் மைல் கல் எனத் தெரிவிக்கப்படுவதோடு இனிவரும் காலங்களில் விவசாயிகள் இயந்திரங்களை மேற்பார்வை செய்தாலே போதும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும் வளர்ந்து வரும் நவீன தொழில் நுட்பமானது விவசாயத்திற்கும் மனிதனுக்கும் தொடர்ந்து வந்த பிணைப்பினை குறைக்க ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகின்றமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg