Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வனஜீவராசிகளில் காட்டும் அக்கறை மக்களிடம் இல்லை: றிஷாத்

In இலங்கை
Published: 17:13 GMT, Sep 30, 2017 |
0 Comments
1304
icon_com
This post was written by : Ravivarman
IMG_8474

வன ஜீவராசிகளின் பாதுகாப்பிலும் பராமரிப்பிலும் அக்கறை காட்டிவரும் அதிகாரிகள், ஜீவனோபாயப் போராட்டம் நடாத்திவரும் மக்களின் நலன்கள் குறித்த விடயங்களில் உணர்வற்றவர்களாக செயற்படுகின்றனர் என்று அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவிடம் அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்துக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) விஜயம் செய்த அமைச்சர் ஜயவிக்ரம பெரேராவிடமே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“மறிச்சுக்கட்டியில் உள்ள உப்பாற்றுப் பகுதியில் காலாகாலமாக மீன் பிடித்து வந்த இந்தப் பிரதேசத்து பூர்வீக மக்களிற்குத் தற்போது மீன் பிடிப்பதற்கு அனுமதி மறுக்கப்படுகின்றது.

அதே போன்று இந்தப் பிரதேசத்தில் அவர்களுக்குச் சொந்தமான பாரம்பரிய காணிகளில் விவசாயம் செய்யவும் அனுமதி மறுக்கப்படுகின்றது.

வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கும், வன பரிபாலன திணைக்களத்துக்கும் இந்தப் பிரதேசங்கள், வர்த்தமானி பிரகடனங்கள் மூலம் உரித்தாக்கப்பட்டுள்ளதாக கூறியே இந்த அநியாயத்தை அதிகாரிகள் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.

கால் நூற்றாண்டு காலமாக இடம்பெயர்ந்திருந்த மக்கள் மீண்டும் இந்த பிரதேசத்தில் மீள்குடியேற்றங்களை மேற்கொண்டு வாழ்க்கை நடத்தும் போது அவர்களுக்கான தொழில்களை மேற்கொள்வதில் பல்வேறு கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர்” என அமைச்சர் றிஷாத் பதியுதீன் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg