சுவீடனில் மோதல்: பொலிஸ் அதிகாரி காயம்
This post was written by : Suganthini
சுவீடனில் தீவிர வலதுசாரி நோர்டிக் எதிர்ப்பு இயக்கத்தின் பேரணியில் இடம்பெற்ற மோதலின்போது, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தை அடுத்து, மோதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 32 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
சுவீடனிலுள்ள கோதென்பேர்க்கில் நேற்று (சனிக்கிழமை) தீவிர வலதுசாரி நோர்டிக் எதிர்ப்பு இயக்கத்தின் பேரணி முன்னெடுக்கப்பட்டது. இவ்வேளையில் பேரணியில் கலந்துகொண்ட நாசிக் குழுவினர் மற்றும் பாசிச எதிர்பாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றது.
இந்நிலையில், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் இந்தச் சம்பவத்தை அடுத்து 32 பேரைக் கைதுசெய்துள்ளாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.