குடியேற்றவாசிகளை காப்பாற்றிய மாலுமிக்கு கௌரவிப்பு

லிபியாவுக்கு அப்பாலான கடற்பரப்பில் தத்தளித்துக்கொண்டிருந்த குடியேற்றவாசிகளை காப்பாற்ற உதவிய ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த வணிகக் கப்பல் மாலுமி ஒருவர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
36 வயதான ஜேமி வில்சன் என்ற மாலுமியே விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
லிபியாவுக்கு அப்பாலான கடற்பரப்பில் அளவுக்கதிகமான குடியேற்றவாசிகளை ஏற்றிக்கொண்டு வந்த படகுகள் நடுக்கடலில் தத்தளித்;துக்கொண்டிருந்த வேளையில், அப்படகுகளில் இருந்த 907 குடியேற்றவாசிகளைக் காப்பாற்ற இவர் உதவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நான்கு நாட்களுக்கு முன்னர் 9 மீட்புப் பணி நடவடிக்கைகளில் இவர் ஈடுபட்டுள்ளதாகவும் இவர் மிகுந்த அர்ப்பணிப்புடன் குடியேற்றவாசிகளைக் காப்பாற்றியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த வருடத்தில் மாத்திரம் மத்தியதரைக் கடல் வழியாக சுமார் ஒரு இலட்சத்து 37 ஆயிரம்குடியேற்றவாசிகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தஞ்சம் கோரியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.