Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பயங்கரவாதிகளின் இலக்கு என்ன? – வெளிவந்த அதிர்ச்சித் தகவல்

In இந்தியா
Updated: 09:18 GMT, Oct 4, 2017 | Published: 07:11 GMT, Oct 4, 2017 |
0 Comments
2099
icon_com
This post was written by : Puvanes
srinagar002

பயங்கரவாதிகளின் உண்மையான இலக்கு ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையமே என இந்திய உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நேற்றைய தினம் குறித்த விமான நிலையத்திற்கு அருகே ஹூம்கமா பகுதியில் உள்ள எல்லையில், இந்திய பாதுகாப்பு படை முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.

இந்தத் தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அத்தோடு இந்திய படை வீரர் ஒருவர் உயிரிழந்ததோடு மேலும் 3 வீரர்கள் படுகாயமடைந்தனர்.

இந்த நிலையில் குறித்த தாக்குதலுக்காக சுமார் ஒரு மாதத்திற்கு முன்னரே, பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் புகுந்து உளவு பார்த்து திட்டமிட்டு வந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாதிகள் அமைப்பு இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பயங்கரவாத அமைப்பானது ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தினைத் தாக்கி அதன் மூலமாக சர்வதேச கவனத்தை ஈர்க்க திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் பயங்கரவாதிகளுக்கு விமான நிலையத்தின் பாதுகாப்பை மீறி உள்ளே செல்ல முடியாத காரணத்தினாலேயே, எல்லைப் பாதுகாப்பு படை முகாம் மீது தாக்குதலை நடத்தியுள்ளார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்பட்ட மூன்று பயங்கரவாதிகள் உட்பட 11 பேர் கடந்த ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தானில் இருந்து ஓர் குழுவாக இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg