Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பேஸ்புக்கின் செயற்பாடுகள்! – பகிரங்க மன்னிப்பு கேட்டார் மார்க்

In அறிவியல்
Updated: 11:41 GMT, Oct 4, 2017 | Published: 11:41 GMT, Oct 4, 2017 |
0 Comments
1784
This post was written by : Puvanes

அன்றாட வாழ்வில் முக்கிய பகுதியாக மனிதனோடு இணைந்து விட்ட பேஸ்புக் வலைத்தளத்தின் உருவாக்குனர் மார்க் ஜூகர்பெர்க் பொதுமக்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார்.

பேஸ்புக் பயன்பாட்டுக்கு வந்து அசுர வளர்ச்சியினைப் பெற்று 10 வருடகாலத்தினையும் கடந்து விட்டது. தொடர்ந்தும் அதன் வளர்ச்சியின் வீதம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

இந்த நிலையில் பேஸ்புக் மூலமாக மக்களை தான் பிரித்து விட்டதாகவும் இதற்காக தன்னை மன்னித்து விடுமாறும் மார்க் பேஸ்புக் பதிவு ஒன்றின் மூலமாக தெரிவித்துள்ளார்.

யூதர்களின் புனித தினத்தை முன்னிட்டு மார்க் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவினூடாகவே இதனைக் கூறியுள்ளார்.

மேலும், பேஸ்புக் தனது செயற்பாடுகள் காரணமாக மக்களைச் சேர்ப்பதற்கு பதில் பிரித்து விட்டது எனவும் மார்க் தனது கவலையினை வெளியிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg