Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

40 இலட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாா்! – பாரதத்தில் ஒரே நேரத்தில் இரு தோ்தல்கள்

In இந்தியா
Updated: 11:12 GMT, Oct 5, 2017 | Published: 09:35 GMT, Oct 5, 2017 |
0 Comments
1338
This post was written by : Puvanes

நாடாளுமன்றம் மற்றும் சட்டசபை ஆகிய இரு தேர்தல்களையும் அடுத்த வருடம் ஒரே நேரத்தில் நடத்த தயாராகவுள்ளதாக டெல்லி தலைமை தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் 2018 செப்டம்பர் மாதத்தில் குறித்த இரு தேர்தல்களையும் நடத்தவுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையாளர் ஓ.பி.ரவத் அறிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், குறித்த தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கு தயாராகும் படி மத்திய அரசு தேர்தல் ஆணையகத்திற்கு அறிவித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து புதிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பெற்றுக் கொள்வதற்காக நிதியை ஒதுக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கையினை விடுத்திருந்தோம் என ரவத் சுட்டிக்காட்டியுள்ளார்.

கூடிய விரைவில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான நிதி கிடைக்கப்பெற்றுவிடும். இதனால் அடுத்த வருடத்தில் 40 இலட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கிடைத்துவிடும் எனக் குறிப்பிட்ட அவர், இதனால் ஒரே சமயத்தில் தேர்தலை நடத்துவதற்கு தயாராகி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg