Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேசிய மட்ட கபடிப்போட்டியில் மட்டக்களப்பு மாணவிகள் சாதனை!

In
Updated: 11:27 GMT, Oct 5, 2017 | Published: 11:27 GMT, Oct 5, 2017 |
0 Comments
1383
This post was written by : Anojkiyan

மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தின் 17வயதுக்குட்பட்ட பெண்கள் அணியினர், தேசிய மட்ட கபடிப்போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இறுதிப்போட்டியில், பண்டதரிப்பு ஜெசிந்தா மகா வித்தியாலயத்தை 30 – 23 என்ற புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தி பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயம் முதலிடம் பெற்றது.

வெற்றிபெற்ற மாணவிகளுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளன. அத்தோடு பயிற்சி ஆசிரியர் இ.புவேந்திரகுமார் மற்றும் கி.கிருஷ்ணராஜன் ஆகியோருக்கும் வெற்றி மாணவர்களுக்கும் பாடசாலை அதிபர் சு.உதயகுமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் இடம்பெற்ற தேசிய மட்ட கபடிப்போட்டியில், பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயம் வெள்ளி பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg