Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தற்கொலைத் பயங்கரவாதிகள் திட்டம்? – வெளிவந்தது திடுக்கிடும் தகவல்!

In இந்தியா
Updated: 12:05 GMT, Oct 5, 2017 | Published: 11:51 GMT, Oct 5, 2017 |
0 Comments
1644
icon_com
This post was written by : Puvanes
attack001

காஷ்மீர் பகுதியில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம் எனவும், அவர்கள் தற்கொலை படைத்தாக்குதல் நடத்தலாம் எனவும் காஷ்மீர் மாநில பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் காஷ்மீர் ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள இந்திய இராணுவ முகாம் மீது ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டிருந்தனர்.

இந்தத் தாக்குதலில் 3 பயங்கரவாதிகளும் ஒரு இராணுவ வீரரரும் உயிரிழந்திருந்தனர். குறித்த தாக்குதல் தொடர்பில் இன்று கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜெய்ஷ் இ முகமது அமைப்பினைச் சேர்ந்த 16 பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுவியுள்ளனர். அவர்கள் அனந்த்நாக், இல்காம், புல்வாமா மற்றும் சோபியா ஆயிக இடங்களின் பதுங்கியுள்ளனர்.

இவர்கள் மூலமாக கடந்த 26 ஆம் திகதி புல்வாமாவில் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது எனக் குறிப்பிட்ட பொலிஸ் உயர் அதிகாரி, அந்த தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் மொத்தமாக இந்தியாவிற்குள் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளில் 6 அல்லது 7 பேர் இன்னும் பதுங்கியுள்ளனர் எனக் குறிப்பிட்ட அவர், ஸ்ரீநகரில் 4 தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக சந்தேகப்படுவதோடு, அவர்கள் தற்கொலைத் தாக்குதலில் ஈடுபடலாம் எனவும் சந்தேகிப்பதாக கூறியுள்ளார்.

இதேவேளை, ஸ்ரீநகர் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அவர்களின் உண்மையான இலக்கு ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையமே என நேற்றைய தினம் உளவுப்பிரிவு தகவல்கள் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg