Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

25 ஆண்டுகளில் ஏற்படப்போகும் நிலை! – வேதனையில் மோடி

In இந்தியா
Updated: 12:10 GMT, Oct 5, 2017 | Published: 12:07 GMT, Oct 5, 2017 |
0 Comments
1421
icon_com
This post was written by : Puvanes
modi001

இளம் தலைமுறையினர் மதுவுக்கு அடிமையாகும் பிரச்சினையைத் தீர்க்காவிட்டால் 25 ஆண்டுகளுக்குள் சமூகமே சீரழிந்து விடும் என பாரதப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில், கூட்டுத் தொலைபேசி காணொளி அழைப்பு (conference video call) ஒன்றினூடாக பேசும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், தற்போதைய நிலையில் இளம் தலைமுறையினர் மதுவுக்கு அடிமையாகும் நிலை அதிகரித்து வருவது தமக்கு வேதனையளிப்பதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலை தொடருமானால் நமது சமூகம் சீர்கெட்டுப் போய்விடும் அதனால் இளம் தலைமுறையினர் தவறான வழியில் செல்வதை தடுக்கவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேபோன்று சுற்றுப்புறச் புறச் சூழல் பாதுகாப்பு தொடர்பிலும் அனைவரும் தமது பங்களிப்பினைச் செலுத்த வேண்டும் எனவும் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg