Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒரே பார்வையில் இன்றைய உலகச் செய்திகள்

In
Updated: 16:05 GMT, Oct 5, 2017 | Published: 16:05 GMT, Oct 5, 2017 |
0 Comments
1322
This post was written by : Sivaguru Siva

கத்தலோனியப் பிராந்திய நாடாளுமன்றத்தின் அடுத்த வார அமர்வை ஸ்பெயினின் அரசியலமைப்பு நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது.

எதிர்வரும் திங்களன்று கத்தலோனிய நாடாளுமன்றம் கூடும்போது அந்த அமர்வில் தன்னிச்சையான சுதந்திரப்பிரகடனம் வெளியிடப்படுமென எதிர்பார்க்கபட்டது.

இந்த நிலையில் இந்த அதிரடி நகர்வை எடுத்த ஸ்பெயினின் அரசியலமைப்பு நீதிமன்றம் கத்தலோனியாவின் தன்னிச்சையான சுதந்திரப்பிரகடனம் ஒரு அரசியலமைப்பு மீறல் எனவும் எச்சரித்துள்ளது.

Paris-un-pere-de-famille-se-defenestre-avec-ses-enfants-le-pere-et-sa-fille-decedes

பரிஸ் நகரிலுள்ள விடுதியொன்றின் மாடி ஜன்னலால் தனது இரண்டு பிள்ளைகளுடன் இன்று குதித்த தந்தையும் அவரது ஆறு வயதான மகளும் பலியாகியுள்ளனர். மூன்று வயதான மகனின் உடை பாதுகாப்பு கம்பிகளில் சிக்கியதால் அவர் உயிர்தப்பியுள்ளார்.

தான் பணிபுரியும் விடுதியிலேயே 47 வயதான மேற்படி தந்தை தற்கொலை நோக்கத்துடன் இந்த செயலை செய்திருக்கின்றார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது

_98153680_rusnavyafp7may10sev

ரஸ்யப் படைத்துறையில் பணியாற்றுவோர் கடமை நேரத்தில் செல்பி எனப்படும் தற்படங்களை எடுப்பதை தடைசெய்யும் வகையில் புதிய சட்டவரைவு ஒன்றை ரஸ்ய பாதுகாப்பு அமைச்சு தயாரித்து வருகிறது.

செல்பி எனப்படும் தற்படங்கள் இணையமூடாக தரவேற்றப்படும்போது  அவற்றின் ஊடாக படைத்துறை சார்ந்த விபரங்கள் எதிரிகளுக்கு போய்ச்சேரும் என்ற அடிப்படையில் இந்த நகர்வு எடுக்கப்படுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

MAIN-Does-Las-Vegas-killers-room-service-receipt-prove-second-person-was-with-him

லாஸ் வேகாஸ் கொலையாளி ஸ்ரிபன் பட்டொக் கடந்த 13 மாதங்களில் 33 துப்பாக்கிகளை கொள்வனவு செய்ததான தரவுகள் வெளிவந்துள்ள நிலையில் தாக்குதலை முடித்ததும் தப்பிச்செல்லும் எண்ணம் அவரிடமிருந்ததாக காவற்துறையினர் குறிப்பிடுகி;ன்றனர்.

ஸ்ரிபன் பட்டொக்கின் வாகனத்தில் சுமார் 50 இறாத்தல் வெடி பொருட்களும் 1,600 துப்பாக்கித் தோட்டாக்களும் இருந்தன

அத்துடன் தான் தங்கியிருந்த அறைக்கு வெளியே கண்காணிப்பு கமெராக்களை பொருத்திய பட்டொக் அதன் மூலம் அறைக்கு வெளியேயுள்ள நிலைமையை கண்காணித்த விடயத்தையும் காவற்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

DHANOA

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய டோக்லாம் பகுதியில் இன்னமும் சீனத் துருப்புகள்; முகாமிட்டுள்ளதாக இந்திய விமானப்படை தளபதி தனோவா இன்று தெரிவித்துள்ளார்.

டோக்லாம் பகுதியிலிருந்து ஏற்கனவே சீனப்படையினா மீளெடுக்கபட்டதாக கூறப்பட்ட நிலையில் இந்திய விமானப்படை தளபதியின் இந்த அதிகாரபூர்வ செய்;தி வந்திருக்கிறது.

சும்பி பள்ளத்தாக்கில் இன்னமும் நிலைகொண்டுள்ள சீனப்படையினர் கோடைக்கால பயிற்சி நிறைவடைந்தவுடன் திருப்பிச்செல்லக்கூடுமெனவும்  தனோவா நம்பிக்கை தெரிவித்தார்.

_98147714_042178970-1

இந்தோனேசியாவில் பெரியதொரு மலைப்பாம்பை பிடித்த கிராமமக்கள் அதனை துண்டு துண்டுகளாக வெட்டிய பொரித்து உண்ட விடயம் தற்போது உலக ஊடகங்களிலும் சமூக வலைத் தளங்களில் பிரபலமாகியுள்ளது

7.8 மீற்றர் அல்லது 26 அடி நீளத்தில் இருந்த இந்த மலைப்பாம்பு பாதுகாப்பு காவலா ஒருவரை இழுக்க முயன்றதையடுத்து  கிராம மக்கள் அதனை கொன்றுவிட்டனர்.

_98147719_042178972-1

ஆரம்பத்தில் இந்த மலைப்பாம்பை காட்சிப்படுத்திய  மக்கள் இறுதியில் அதனை  உண்ணும் முடிவை எடுத்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசியாவில் பாரிய மலைப்பாம்புகள் அதிகளவில் காணப்படுவது வழமையானது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg